Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Sri Abaya Varatheeswarar Temple,Atirampatinam

அருள்மிகு ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி அம்மன் உடனுரை அபய வரதீஸ்வரர் திருக்கோயில் அதிராம்பட்டினம்


Arulmigu Sri Abaya Varatheeswarar Temple,Atirampatinam !!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ அபய வரதீஸ்வரர் 

இறைவி :அருள்மிகு சுந்தர நாயகி

தல மரம் :வில்வம்,வன்னி மரம்

தீர்த்தம் :

Thirukadaiur Mullaivana Nathar Temple


அருள்மிகு ஸ்ரீ அபய வரதீஸ்வரர் திருக்கோவில் அதிராம்பட்டினம் தல வரலாறு.

முன்னொரு காலத்தில், அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும், சிவபெருமான் உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. இந்த மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர். அதே நேரம் அங்கு சென்று சரணடைந்தவர்களை அவர் அபயம் தந்து காப்பாற்றுவார்.

இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும். பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர் இத்தலத்தில் அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது. ரைவதம் என்பது சிவனது முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார். இந்த முனிகள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன் ஆதிரை தானதில் அபயமென்றருளுவன் ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில் ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா! என்ற திருவாதிரை கோயில் பற்றிய பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெறலாம்.

எம பயம் போக்கும் தலம்:

தீராத நோயால் அவதிப் படுபவர்கள், எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. இந்த நட்சத்திர பெண்களுக்கு எந்த தோஷத்தினால் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மன்னர் அதிவீரராமபாண்டியன் இத்தல இறைவனை வழிபட்டு பல அரிய திருப்பணிகள் செய்துள்ளார். அவரது பெயரால், அதிவீரராமன் பட்டினமாகி, தற்போது அதிராம்பட்டினமாக மாறிவிட்டது. இத்தல அம்மன் சுந்தரநாயகி கடலை நோக்கி அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயர் உண்டு



திருக்கோயில் முகவரி :

அருள்மிகு அபயவரதீஸ்வரர் திருக்கோயில்,
அதிராம்பட்டினம்-614 701
பட்டுக்கோட்டை தாலுக்கா,
தஞ்சாவூர் மாவட்டம்.



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6.30 - மதியம் 12, மாலை 4 -இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்



அமைவிடம்:

தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ள பட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தை அடையலாம்.